அமர்ந்த நிலையில் சாமியார் பிணம் மீட்பு
நாமக்கல்லில் தனியார் லாட்ஜில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் சாமியார் பிணம் மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் அகஸ்தீஸ்வரானந்த சரஸ்வதி (வயது 55). சாமியாரான இவர் நேற்று முன்தினம் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் சாமியார் தனது அறையில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறு, இறந்து கிடந்தார். இது குறித்து லாட்ஜ் பணியாளர்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சாமியார் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story