ரபேல் போர் விமான முறைகேடு: மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ரபேல் போர் விமான முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் ரமேஷ்ரெட்டியார், ராமசந்திரன், மாவட்ட துணை தலைவர் ரெங்கமணி, பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், கிஷோர்குமார், சாந்திராஜ், முருகன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வேலுசாமி வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்னம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
ரபேல் போர் விமான முறைகேடு, ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யும் நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சித்தார்த்தன், வேல்முருகன், ராஜேஷ், ஓவியர் ரமேஷ், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல்மணிரத்னம், வட்டார தலைவர் சேரன், பண்ருட்டி முருகன் உள்பட மாநில, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனிடம் காங்கிரசார் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story