நவிமும்பை அருகே நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கற்பழித்தவர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


நவிமும்பை அருகே நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கற்பழித்தவர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Sept 2018 5:15 AM IST (Updated: 27 Sept 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண் கடத்தல்

நவிமும்பை பன்வெலை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண் திடீரென காணாமல் போய் விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சம்பவம் குறித்து பன்வெல் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், அந்த பெண் 10 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார். அப்போது, அவர் அதிர்ச்சி தகவலை கூறினார்.

சம்பவத்தன்று அந்த பெண்ணை அவரது கணவரின் நண்பரான பிந்து போயர் என்பவர் தனது நண்பர்களான உமேஷ், சிவா ஆகியோருடன் சேர்ந்து காரில் கடத்தி கொண்டு சென்றார்.

கற்பழிப்பு

பின்னர் 10 நாட்களாக அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை வெவ்வேறு இடங்களில் வைத்து கற்பழித்து உள்ளனர். மேலும் ஒரு பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அந்த பெண் கணவரிடம் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மனைவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பிந்து போயர் உள்பட 3 பேர் மீதும் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் பிந்து போயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story