விவசாயிகள் நலன் பாதிக்காத வகையில் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.
விவசாயிகள் நலன் பாதிக்காத வகையில் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
ஓமலூர்,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தனது தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் புதிய திட்டப்பணிகளை சேலம் மாவட்டம் கொளத்தூரில் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழக கவர்னர் தூங்கிக்கொண்டு உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 துறைகளில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து 206 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை கவர்னரிடம் நேரடியாக கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி, மாறி குற்றம் சாட்டிக்கொள்வது நல்லது. ஏனென்றால் அப்போது தான் அவர்களுடைய ஊழல்கள் வெளிவரும். அது மக்களுக்கு தெரியும். 3 முதல்-அமைச்சர்கள் காலத்திலும் டெண்டர் விடப்பட்டு உரிய கமிஷன் கிடைக்காததால் தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிப்படைந்து வருவது கண்டனத்திற்குரியது.
நான் நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவன் அல்ல. சேலம் விமான நிலையம் விரிவாக்கம் அவசியம் தான். ஆனால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதிக்காத வகையில் இந்த விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.எடப்பாடி பழனிசாமியின் முதலாளி கட்சியில் எச்.ராஜா, இருப்பதால் தான் அவரை கைது செய்யவில்லை. 8 வழிச்சாலை திட்டம் அவசியம் இல்லாத ஒன்று. இது மக்களுக்கு பயன்படாத திட்டம். வாணியம்பாடியில் சாலை விரிவாக்கம் செய்தாலே போதுமானது.
அதேபோல் தோனி மடுவு திட்டம் 80 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டால் 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி அதிகரிக்கும். மேட்டூர் அணை உபரிநீர் கடந்த 8 வாரங்களில் 170 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) வீணாக கடலில் கலந்துள்ளது. சேலம் பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி ஒரு டி.எம்.சி. தண்ணீரை தேக்கினால் சேலம் மாவட்டத்திற்கு ஓராண்டுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்குவதை கைவிட்டு விட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story