5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல், 


நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 50). தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி இவரது வீட்டின் அருகே சில குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர். அவர்களில் 5 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜாவை போலீசார் பாதுகாப்புடன் கோவை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். ராஜாவுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story