லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு டிரைவர் கைது
திருவள்ளூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த மாதம் 31-ந் தேதியன்று வீரமுத்து திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு சிமெண்டு மூட்டைகளை இறக்குவதற்காக லாரியில் சென்றார். லாரியில் இருந்து சிமெண்டு மூட்டைகளை வீரமுத்து இறக்கி கொண்டிருந்தார். இதை கவனிக்காத லாரி டிரைவர் முருகன் (38) லாரியை இயக்கினார்.
இதில் லாரியில் இருந்து நிலை தடுமாறிய வீரமுத்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
இதை பார்த்த உடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story