குற்ற சம்பவங்களை தடுக்க 14 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்


குற்ற சம்பவங்களை தடுக்க 14 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 28 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 14 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

திருவள்ளூர் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க ஏதுவாகவும் மேலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் ஏதுவாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியின் சீரிய முயற்சியில் திருவள்ளூர் நகரில் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, காக்களூர் சந்திப்பு பகுதி, செங்குன்றம் சாலை சந்திப்பு பகுதி, ஆயில் மில் பகுதி, மணவாளநகர் சந்திப்பு பகுதி என முக்கியமான இடங்களில் 14 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த 14 நவீன கண்காணிப்பு கேமராக்களும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. இதே போன்ற கண்காணிப்பு கேமராக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திரளான போலீசார் உடன் இருந்தனர்.

Next Story