தண்டவாள பராமரிப்பு பணிக்காக திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் நாளை பகுதி ரத்து


தண்டவாள பராமரிப்பு பணிக்காக திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் நாளை பகுதி ரத்து
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் நாளை பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை, 

திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் நாளை பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்னக ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தண்டவாள பராமரிப்பு பணி

விருதுநகர்- வாஞ்சி மணியாச்சி இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே அன்றைய தினம் திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56770) நெல்லை-மதுரை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று அன்றைய தினம் பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56769) மதுரை-நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.அன்றைய தினம் திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56770) மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு அல்லது 2 மணி 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும். அன்றைய தினம் நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56319) கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று அன்றைய தினம் கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56320) திண்டுக்கல்-கோவில்பட்டி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்

அன்றைய தினம் திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 22628) திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, திருச்சியை 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக சென்றடையும். அன்றைய தினம் ஈரோடு-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56825) நெல்லைக்கு இரவு 11.30 மணி அல்லது 50 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

சேலம் கோட்டத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 16339) இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை), 1-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக வந்து செல்லும். மேற்கண்ட ரெயில் வருகிற 4, 5, 6, 8 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வந்து செல்லும். மேற்கண்ட ரெயில் வருகிற 11-ந்தேதி திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு 30 நிமிடம் தாமதமாக வந்து செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story