மருத்துவத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.41 லட்சம் மோசடி; முன்னாள் செயலாளர் கைது
தூத்துக்குடி மருத்துவத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மருத்துவத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
மோசடி
தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கோரம்பள்ளம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த கனி (வயது 61) என்பவர், கடந்த 7.3.2009 முதல் 4.7.2017 வரை சங்க செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் சங்க உறுப்பினர்கள் கடன் கணக்கிற்கு செலுத்திய தொகையினை கணக்கிற்கு வரவு வைக்காமல் நேரடியாக ரசீது வழங்கியும், சான்றிதழ் வழங்கியும், வேறொருவர் கணக்கிற்கு வரவு வைத்தும் உறுப்பினர்களின் கடன் கணக்கு புத்தகங்களில் நேரடியாக பதிவுகள் மேற்கொண்டும் ரூ.40 லட்சத்து 98 ஆயிரத்து 346 மோசடி செய்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
கைது
இதுகுறித்து தூத்துக்குடி கூட்டுறவு துணைப்பதிவாளர் சிவகாமி, சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் செய்தார்.
அதன் பேரில் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு, நெல்லை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவின்படி, தூத்துக்குடி வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, கனியை கைது செய்து நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story