திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காயாமொழி

சி.பா.ஆதித்தனார் பிறந்த ஊரான காயாமொழியில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஊர் மக்கள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், வெங்கடேச ஆதித்தன், பத்மநாப ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், பகவதி ஆதித்தன், தையல்பாகு ஆதித்தன், அச்சுத ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.பா.ஆதித்தனாரின் உருவ சிலைக்கு இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தி.மு.க. தெற்கு மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலசிங், ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், பஞ்சாயத்து செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ்,

சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சியாமளா, சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், முத்து ரமேஷ், தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவனேசன், அஜித்குமார், பட்டு, வக்கீல் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story