பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2018 3:45 AM IST (Updated: 28 Sept 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சமையலர் மற்றும் இரவு காவலர் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும் என்று விடுதி பணியாளர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதி பணியாளர் நலச் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனு. மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் இரவு காவலர் காலி பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும்.

சமையலர் பதிவு மூப்பு பட்டியல் வெளியிட்ட பின்னர் பணிமாறுதல் செய்ய வேண்டும். சமையலர்கள் குறைகளை மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் கேட்பதற்கு ஏற்ப கால முறைக் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமையலர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story