பீடி கம்பெனி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் நூதன முறையில் கொள்ளை


பீடி கம்பெனி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் நூதன முறையில் கொள்ளை
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. அதிகாரி என கூறி பீடி கம்பெனி உரிமையாளரிடம் ரூ.1 லட்சத்தை மர்ம நபர் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றார்.

ஜோலார்பேட்டை,


வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58), பீடி கம்பெனி நடத்தி வருகிறார். இவர், திருப்பத்தூர் அருகே பீடி பண்டல்களை வினியோகம் செய்துவிட்டு அதற்கான பணம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

புதுக்கோட்டை கிராமம் அருகே வந்தபோது, அங்கு ஒருவர் சின்னசாமியின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நான் சி.பி.ஐ. அதிகாரி, நீங்கள் தவறான முறையில் பணம் சம்பாதிப்பது தெரிய வந்துள்ளது. அதனால் உங்களை நான் சோதனை செய்கிறேன் என கூறி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு, இந்த பணத்திற்கு உண்டான ஆவணங்களை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காண்பித்துவிட்டு பின்னர் பணத்தை பெற்றுகொள்ளலாம் என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சின்னசாமி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது போலீசார் அதிர்ச்சி அடைந்து அப்படி பணம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. உங்களை யாரோ ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றதாக கூறினர்.

இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த இடம் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அங்கு அனுப்பி வைத்தனர். 

Next Story