திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது.
திருப்பூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொது சுகாதாரத்துறை நிர்வாகி ராஜூ ஆகியோர் பேசினார்கள். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பரமேஸ்வரி நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் புல்லானி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் கொடுத்து முறையிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லோகநாயகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராணி கோரிக்கை குறித்து பேசினார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணி பதிவில் பார்வையாளர் இலக்கை நீக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொது சுகாதாரத்துறை நிர்வாகி ராஜூ ஆகியோர் பேசினார்கள். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பரமேஸ்வரி நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் புல்லானி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் கொடுத்து முறையிட்டனர்.
Related Tags :
Next Story