அந்தியூர் அருகே ‘செல்போன் கோபுரம் அமைத்தால் தீக்குளிப்பேன்’ தொழிலாளி தற்கொலை மிரட்டல்
செல்போன் கோபுரம் அமைத்தால் தீக்குளிப்பேன் என்று உடலில் பெட்ரோலை ஊற்றி தொழிலாளி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அந்தியூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42). வீட்டின் அருகிலேயே இவருக்கு சொந்தமாக 3 செண்ட் நிலம் உள்ளது. இதில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தினர் கோபுரம் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இங்கே செல்போன் கோபுரம் அமைக்க கூடாது. கதிர்வீச்சால் பல நோய்கள் ஏற்படும் என்று தடுத்தார்கள். அதைத்தொடர்ந்து கருப்புசாமி நேற்று முன்தினம் ஈரோடு கோர்ட்டில், தன்னுடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி ஆணை வாங்கினார். அதை நிறைவேற்ற ஆப்பக்கூடல் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார். அதன்படி நேற்று முன்தினம் மாலை தனியார் செல்போன் நிறுவனத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கினார்கள்.
இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் தகவல் பரவியதை தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டார்கள். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜா (41) என்பவர் ஓடிச்சென்று வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்தார். பின்னர் போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, ‘இந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைத்தால் நான் தீக்குளிப்பேன்’ என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். உடனே போலீசார் அவர் மேல் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினார்கள்.
அதன்பின்னர் செல்போன் நிறுவன அதிகாரிகளிடம் போலீசார், ‘பிரச்சினை ஏற்படுவதால் தற்சமயம் செல்போன் கோபுரம் இங்கு அமைக்கவேண்டாம். இதுகுறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்‘ என்று இருதரப்பையும் சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story