குடிநீர் வரி செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வாரியம் நடவடிக்கை


குடிநீர் வரி செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வாரியம் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2018 4:00 AM IST (Updated: 28 Sept 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வரி செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, தேனாம்பேட்டையில் சதானந்தம் என்பவருக்கு சொந்தமான கதவு எண் 322-ல் உள்ள 5 கடைகளுக்கான குடிநீர் வரி (2002 முதல்) ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 595 செலுத்தப்படவில்லை. இதனால் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான குடிநீர் இணைப்பை துண்டித்தது.

தொடர்ந்து நிலுவை தொகையை செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தவில்லை. இதனால் வாரிய அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று 5 கடைகளுக்கும் அதன் உரிமையாளர், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story