மணப்பட்டு கடற்கரையை ரூ.3 கோடி செலவில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி


மணப்பட்டு கடற்கரையை ரூ.3 கோடி செலவில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி
x
தினத்தந்தி 28 Sept 2018 4:02 AM IST (Updated: 28 Sept 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கிராமத்தின் கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது.

பாகூர்,

மத்திய அரசின் சுதேசி தர்சன் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரையோரம் மரத்தால் ஆன 15 வீடுகள், சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா, உணவகம், நடைபயிற்சிக்கான நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

அதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனவேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறுகையில், “மணப்பட்டு கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக்கும் பணியில் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்ததும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜீவதயாளன், உதவி பொறியாளர் வல்லவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story