டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள், பணம் திருட்டு


டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 Sept 2018 3:15 AM IST (Updated: 28 Sept 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரில் டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுபாக்கம், 


மங்களூரில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு விற்பனையாளரும், மேற்பார்வையாளரும் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலையில் டாஸ்மாக் கடையின் கதவு உடைந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், விற்பனையாளருக்கும், மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித் தனர். அதன்பேரில் 2 பேரும் விரைந்து சென்று பார்வையிட்டனர். கடையில் இருந்த 10 மதுபாட்டில்கள், ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள், டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் விரைந்து சென்று, திருட்டு நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story