உடற்பயிற்சியாளரை கடத்தி தாக்கிய வழக்கில் கைது: நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு
உடற்பயிற்சியாளரை தாக்கிய வழக்கில் நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து பெங்களூரு செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
உடற்பயிற்சியாளரை தாக்கிய வழக்கில் நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து பெங்களூரு செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் துனியா விஜய்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் துனியா விஜய், கடந்த 22-ந் தேதி இரவு பெங்களூரு வசந்த்நகரில் வைத்து உடற்பயிற்சியாளரான மாருதிகவுடாவை காரில் கடத்தி சென்று நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக ஐகிரவுண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் துனியா விஜய் சார்பில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு
ஜாமீன் கிடைக்காததால் நடிகர் துனியா விஜய் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், துனியா விஜய் சார்பில் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கோரி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, அரசு மற்றும் துனியா விஜய் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதி (அதாவது நாளை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story