பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை சொந்த பலத்தில் சிவசேனா ஆட்சியை பிடிக்கும்
பா.ஜனதா கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை, சொந்த பலத்தில் மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
பா.ஜனதா கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை, சொந்த பலத்தில் மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்து உள்ளார்.
கூட்டணிக்கு விருப்பம்
மராட்டியத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வரும் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன.
ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் தேர்தல் கூட்டணி கேள்விக்குறியாகவே உள்ளது. சிவசேனா ஏற்கனவே வரும் தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக அறிவித்து விட்டது. இருப்பினும் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கடைசி நிமிடத்தில் இரு கட்சிகளும் கைக்கோர்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார்(பா.ஜனதா), “ அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறோம். ஆனால் கூட்டணி விஷயத்தில் சிவசேனா தான் முடிவு எடுக்கவேண்டும்” என்றார்.
சிந்திக்கவில்லை
இவரின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான சுபாஷ் தேசாய் கூறியதாவது:-
நாங்கள் எங்கள் கட்சியின் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வருவோம். சிவசேனா கட்சியில் இருந்துதான் அடுத்த முதல்-மந்திரி வரப்போகிறார். கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் வருகிற தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். பா.ஜனதா கூறிய கூட்டணி குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை.
இந்த முறை மாநிலத்தில் முழு பலத்தையும் காட்டுவதில் தான் எங்களது கவனம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story