காங்கிரஸ் மக்களை குழப்புகிறது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றிபெறும்
காங்கிரஸ் கட்சி மக்களை குழப்ப முயற்சி செய்கிறது. ஆனால் பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என மராட்டிய பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.
மும்பை,
காங்கிரஸ் கட்சி மக்களை குழப்ப முயற்சி செய்கிறது. ஆனால் பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என மராட்டிய பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.
பா.ஜனதா கூட்டம்
மும்பை புறநகரில் உள்ள பாந்திராவில் பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே கலந்துகொண்டு பேசியதாவது:-
மக்களை பா.ஜனதாவுக்கு எதிராக மாற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். ஆனால் அதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக மக்களை குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மக்களை குழப்பும் வியூகத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கையாண்டு வருகிறது.
அதிக இடங்களை கைப்பற்றும்
ஆனால் பா.ஜனதா வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிக இடத்தை கைப்பற்றும்.
அடித்தளமாக விளங்கும் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பலம் இல்லாதபோதும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிகரமாக அதிக இடங்களை கைப்பற்றியது.
தற்போது நமக்கு மராட்டியத்தின் கிராமப்புறங்களில் கூட அதிக தொடர்பு ஏற்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளிலும் நமக்கு நிர்வாகிகள் உள்ளனர். எனவே கடந்த முறையை விட வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மராட்டிய பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு அதிக விவசாய கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story