திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய திருவிழா
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று காலையில் சப்பர ஜெபமாலை பவனி, திருப்பலி நடந்தது. கொடியேற்றத்துக்கு அமலிவனம் அருட்தந்தை அமலதாஸ் தலைமை தாங்கினார். சேதுக்குவாய்த்தான் பங்குதந்தை ராயப்பன் மறையுரையாற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு பங்குதந்தை ராயப்பன் தலைமையில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மணப்பாடு தூயஆவி பங்குதந்தை அருமைநாதன் தலைமையில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது.
சப்பர பவனி
8-ந் திருவிழாவான 5-ந் தேதி புனித அந்தோணியார் சப்பர பவனி, சாத்தான்குளம் இமாக்குலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ம் திருநாளான 6-ந் தேதி காலை 5 மணிக்கு அருட்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலியும், இரவு 7 மணிக்கு அருட்தந்தை ஜஸ்டின் தலைமையில் மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் அற்புத சப்பரபவனியும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 7-ந் தேதி காலை 7 மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை ததேயுஸ்ராஜன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி, இரவு 9.30 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது. 8-ந் தேதி மதியம் பங்குதந்தை பீட்டர் பால் தலைமையில் அசன விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குதந்தை பீட்டர் பால் மற்றும் சபை மக்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story