தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஊழியர்கள் திடீர் மறியல் சரக்கு போக்குவரத்து பாதிப்பு


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஊழியர்கள் திடீர் மறியல் சரக்கு போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 29 Sept 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஊழியர்கள் நேற்று மாலை திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஊழியர்கள் நேற்று மாலை திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

மறியல் போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வாயிலில் துறைமுக ஊழியர்கள், சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பணியில் இருந்து துறைமுக ஊழியர்களை அகற்றுவதற்கு துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது. இதனை கண்டித்து துறைமுக அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை திடீரென துறைமுக வாயிலில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்துக்கு துறைமுக சி.ஐ.டி.யு. செயலாளர் ரசல், ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் கதிர்வேல், எச்.எம்.எஸ். சங்க செயலாளர் சத்யநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த திடீர் போராட்டத்தால், வ.உ.சி. துறைமுகத்துக்குள் லாரிகள் செல்ல முடியவில்லை.

இதனால் துறைமுகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி, போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.

Next Story