ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் அடைப்பு நோயாளிகள் அவதி
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
நெல்லை,
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
ஆன்லைன் விற்பனை
நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பொதுமக்கள் மருந்தின் தரத்தினை அறிந்து கொள்ள முடியாது. பல மருந்துகள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ஆனால் ஆன்லைன் மூலம் வாங்கும் மருந்துகள் அப்படி வைத்திருக்க முடியாது.
மேலும் ஆன்லைன் விற்பனையால் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆன்லைன் விற்பனையை தடைசெய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில்...
நெல்லை மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டையில் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மருந்து, மாத்திரை வாங்க முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
மத்திய- மாநில அரசுகளால் நடத்தப்படும் மருந்துகடைகள் மட்டும் திறந்து இருந்தன. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானவர்கள் வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story