கடப்பாக்கம் ஏரியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


கடப்பாக்கம் ஏரியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 29 Sept 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

டப்பாக்கம் ஏரியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவொற்றியூர், 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவொற்றியூர் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து மணலி அருகே உள்ள கடப்பாக்கம் ஏரியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ்கண்ணா தலைமையில் எண்ணூர், மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் வெள்ள காலத்தில் வீட்டில் உள்ள தண்ணீர் கேன்கள், டியூப், டிரம், வாழை மரங்கள், தென்னம்மட்டை உள்ளிட்டவைகளை வைத்து எப்படி தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வது? என்பது குறித்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உதவி தீயணைப்பு அதிகாரிகள் லோகநாதன், பொன்மாரியப்பன், சக்திவேல், திருவொற்றியூர் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Next Story