நெல்லையில் கருப்பு சட்டை அணிந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் கருப்பு சட்டை அணிந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 29 Sept 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கருப்பு சட்டை அணிந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லையில் கருப்பு சட்டை அணிந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்டம், மாநகரம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் முருகேசன், நெல்லை மாநகர தலைவர் குணசேகரன், தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் காஜாமுகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மாவட்ட செயலாளர் விநாயகம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சிறு, குறு வணிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இனி வருங்காலத்தில் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வணிகர்களை பாதிக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் திவ்யா ரங்கன், துணை செயலாளர் நயன்சிங், மத்திய மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாநகர பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில், நெல்லை மாநகர செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story