‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மராட்டியம் முழுவதும் மருந்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு


‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மராட்டியம் முழுவதும் மருந்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 5:30 AM IST (Updated: 29 Sept 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் நேற்று மராட்டியம் முழுவதும் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை, 

‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் நேற்று மராட்டியம் முழுவதும் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மருந்து விற்பனை பாதிக்கப்பட்டதாக சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மருந்து கடைகள் அடைப்பு

‘ஆன்-லைன்’ மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து மராட்டியம் முழுவதும் மருந்து வணிகர்கள் நேற்று ஒரு நாள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த வேண்டும் என அறிவித்து இருந்தனர்.

இதன்படி மராட்டியம் முழுவதும் நேற்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாக சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மும்பையில் போராட்டம்

மும்பை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ‘ஆன்-லைன்’ மருந்து விற்பனையை எதிர்த்து நேற்று மும்பையில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மும்பை ஆசாத் மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மும்பை மட்டும் இன்றி தானே, நவிமும்பையை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஆன்-லைன்’ மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

நேற்று நடந்த இந்த மருந்து கடை அடைப்பு போராட்டத்தால் மாநிலம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story