போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்று மோசடி: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 4 பேர் பிடிபட்டனர்


போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்று மோசடி: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 4 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 29 Sept 2018 5:15 AM IST (Updated: 29 Sept 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்று மோசடி செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்று மோசடி செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

தானே மாவட்டம் பிவண்டியில் போலி ஆவணங்கள் மூலம், ஒரு கும்பல் வாகனங்களை விற்பனை செய்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் ஏஜெண்டு சாகீர் சையத் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த கும்பல் பழைய வாகனங்களை வாங்கி அதற்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து வெவ்வேறு இடங்களில் விற்று வந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் சிக்கினர்

இதனை தொடர்ந்து போலீசார் பீட் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அதிகாரிகளான ராஜேந்திர நிகம், நிலேஷ் புங்கரே ஆகிய 2 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து பழைய வாகனங்களை விற்க அந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 32 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story