வாடகைக்கு வீடு எடுத்து போலி மது ஆலை - 3 பேர் கைது
காட்பாடி பாரதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து போலி மதுபான ஆலை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கார், போலி மது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காட்பாடி,
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியிலிருந்து காரில் போலி மதுபான பாட்டில்கள் கடத்திச்செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் நேற்று காட்பாடி விருதம்பட்டு புத்துக்கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சசிக்குமார், பிரேமா, மத்திய புலனாய்வு துறையின் வேலூர் சரக இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை அவர்கள் மடக்கினர். காரில் 3 பேர் இருந்தனர். காரை சோதனை செய்தபோது அதில் சில மதுபாட்டில்கள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் காட்பாடி பாரதிநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்த நாகேஸ்வரன் (வயது 53), மேட்டுத்தெருவை சேர்ந்த சின்னராஜ் என்ற அப்பு பட்டானி (68), ஒடுகத்தூரை சேர்ந்த ரவி (54) ஆகியோர் என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது “நாங்கள் பாரதிநகர் 3-வது குறுக்குத்தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரகசியமாக போலி மது தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறோம்” என்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று, அந்த வீட்டில் சோதனை செய்தனர். அந்த வீட்டின் கழிவறையில் இவர்கள் 3 பேரும் போலி மது தயாரித்து வந்தது தெரியவந்தது.
அங்கு 192 போலி மதுபாட்டில்கள், போலி மது தயாரிப்பதற்கான எரி சாராயம், ஆல்கஹால் அளவு சரிபார்க்கும் கருவி, ஸ்டிக்கர், பாட்டில்கள், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 கேன்கள், பாட்டில் மூடிகள், மூடி மாட்டும் எந்திரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். மேலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், “போலி மதுவை டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்தனரா? அல்லது சில்லரை விலையில் இவர்களே விற்பனை செய்தனரா? என்பது குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Related Tags :
Next Story