பெண்கள் விழிப்புடன் இருந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் - கலெக்டர் ராமன்
பெண்கள் விழிப்புடன் இருந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி வேலூரில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் சாரதிமாளிகை, தெற்கு போலீஸ் நிலையம், திருப்பதி தேவஸ்தானம், கோட்டை, மக்கான் சந்திப்பு வழியாக சென்று நகர அரங்கை அடைந்தது. அங்கு ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை பார்வையிட்ட கலெக்டர் அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இயற்கை உணவுகளை சுவைத்துபார்த்தார்.
அதைத்தொடர்ந்து நகர அரங்கில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொது மக்களுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடம் மற்றும் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்களுக்கும் ஊட்டச்சத்து பற்றி அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் நோக்கம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை உருவாக்குவதுதான்.
நமக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். அதற்கு கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 3,680 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் தான் அதிக நேரம் உள்ளனர்.
பெண்கள் விழிப்புடன் இருந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அறிவான குழந்தைகள் பிறந்தால்தான் நாடு வல்லரசாக மாறும். எனவே குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன், அடிப்படை கல்வியை கற்றுத்தர வேண்டும். அதுவே அவர்களின் தொடக்க கல்விக்கான ஆரம்பமாகும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Related Tags :
Next Story