கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 36 லாரிகள் சிக்கின
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 36 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக அரசின் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி உள்ளது. இங்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மணல் கடத்தலை தடுக்க கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 36 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவற்றில் சில லாரிகளில் உரிய அனுமதி இருப்பதாக லாரி டிரைவர்களும், அதன் உரிமையாளர்களும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள், மேற்கண்ட சோதனைச்சாவடியில் போலீசாரால் கைப்பற்றப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ள லாரிகளில் உள்ள மணலுக்கான ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் பின்னரே உரிய ஆவணங்கள் இல்லாது மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் அதன் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story