திருவள்ளூரில் தூய்மை ரத விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தூய்மை ரத விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தூய்மை சேவை திட்டத்தின் வாயிலாக முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகத்தை உருவாக்கிட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை ரத வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தூய்மை ரத விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவருடன் சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story