எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
சென்னை,
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தனியார் பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்களில் தொண்டர்கள் பெருமளவில் வரவுள்ளனர். தனியார் பேருந்துகள் மற்றும் வேன்களை நிறுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விவரம் வருமாறு:-
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், வேன், மற்றும் கார்களை நிறுத்த கிண்டி எஸ்டேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிருந்து வரும் பேருந்துகளை சென்னை, தீவுத்திடல் சிவானந்தா சாலை, மற்றும் கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை
மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிருந்து வரும் பேருந்துகளை நிறுத்த சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மற்றும் ஐ.டி.பி.எல் மைதானத்தில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை நிறுத்த ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர்.), அருகில் உள்ள சி.பி.டி. வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களான விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த ஒய்.எம்.சி.ஏ. ராணுவ மைதானம், தாலுகா அலுவலகம் சாலை பணிமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story