நவம்பர் 1-ந் தேதி முதல் ஏ.சி. மின்சார ரெயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் மேற்கு ரெயில்வே அறிவிப்பு
ஏ.சி. மின்சார ரெயில்கள் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் கூடுதல்ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மும்பை,
ஏ.சி. மின்சார ரெயில்கள் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் கூடுதல்ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஏ.சி. மின்சார ரெயில் சேவை
மும்பையில் சர்ச்சேட் - விரார் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் விரார் - சா்ச்கேட், போரிவிலி - சர்ச்கேட் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்தரெயில்கள் மும்பை சென்டிரல், தாதர்,பாந்திரா, அந்தேரி, போரிவிலி, பயந்தர், வசாய் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
குறைவான இடங்களில் நின்று செல்வதால் ஏ.சி. மின்சார ரெயில்களுக்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே ஏ.சி. மின்சார ரெயில்களை கூடுதல் இடங்களில் நிறுத்த மேற்கு ரெயில்வே திட்டமிட்டு இருந்தது.
கூடுதல் ரெயில் நிலையங்கள்
இந்தநிலையில் வருகிறநவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏ.சி. மின்சார ரெயில்கள் கூடுதல் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
இந்த அறிவிப்பின் படி நவம்பர் 1-ந் தேதி முதல் ஏ.சி. மின்சார ரெயில்கள் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களுடன் கூடுதலாக மெரின்லைன், சர்னிரோடு, கிராண்ட் ரோடு, தகிசர், மிரா ரோடு, நைகாவ், நாலச்சோப்ரா ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
Related Tags :
Next Story