நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை பர்பானி கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பர்பானி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அவுரங்காபாத்,
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பர்பானி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மனைவி அடித்துக்கொலை
பர்பானியில் உள்ள கோட்வாய் அருகே சகாலா பிளாட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ பவார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
ராஜூ பவாருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதி அவர்களுக்குள் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த ராஜூ பவார், வீட்டில் இருந்த மண்வெட்டியால் லதாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த லதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார்.
மகள் சாட்சி
இந்த சம்பவம் குறித்து கோட்வாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூ பவாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பர்பானி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கில் ராஜூ பவாருக்கு எதிராக அவரது மகள் உள்பட 8 பேர் சாட்சி அளித்தனர்.
விசாரணையில் அவர் தான் கொலையாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதை தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story