சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு
சிதம்பரத்தில் தோழிகளுடன் குளித்த போது குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் இறந்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே கடவாச்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகள் சிவசக்தி (வயது 10). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரவீனா (12). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிவசக்தி 5-ம் வகுப்பும், பிரவீனா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தோழிகளான சிவசக்தி, பிரவீனா ஆகியோர் பள்ளி விடுமுறை நாட்களில் அதே பகுதியை சேர்ந்த தோழிகளுடன் சேர்ந்து விளையாடுவதும், அங்குள்ள குளத்தில் குளித்து மகிழ்வதும் வழக்கம். அந்த வகையில் காலாண்டு விடுமுறையை அப்பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடி இருவரும் கழித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு சிவசக்தி, பிரவீனா மற்றும் கீர்த்திகா (10), வேதிஷா (11) உள்பட 10 சிறுமிகள் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிவசக்தி, பிரவீனா, கீர்த்திகா, வேதிஷா ஆகிய 4 பேர் மட்டும் ஆர்வமிகுதியில் குளத்தின் அழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்த சக தோழிகள் கரையில் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். அப்போது குளத்தில் 4 பேரும் மூழ்கினர். இதை பார்த்த சில இளைஞர்கள் குளத்தில் குதித்து மூழ்கிய 4 சிறுமிகளையும் மீட்டு, சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதில் சிவசக்தி, பிரவீனா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே மற்ற 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இறந்த 2 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 2 பேரின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பெற்று வரும் கீர்த்திகா (10), வேதிஷா (11) ஆகிய 2 சிறுமிகளும் சிதம்பரம் வக்காரமாரியை சேர்ந்தவர்கள். சிதம்பரம் உதவி பெறும் பள்ளியில் கீர்த்திகா 5-ம் வகுப்பும், வேதிஷா 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் தற்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறைக்காக கடவாச்சேரியில் உள்ள பாட்டி அஞ்சம்மாள் வீட்டிற்கு வந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் குளத்தில் குளித்த போது தண்ணீர் மூழ்கினார்கள். தோழிகளுடன் குளித்த போது 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கடவாச்சேரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story