கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு: 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு: 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 30 Sept 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கள்ளநோட்டுகளுடன் 2 பேர் கைது

மும்பை சாந்தாகுருஸ் பகுதிக்கு 2 பேர் கள்ளநோட்டுகளுடன் வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் கள்ள நோட்டுகளுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

போலீசார் அவர்கள் 2 பேரிடமும் இருந்து ரூ.92 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அன்வர் சேக் (வயது 33), கசாம் சேக் (22) என்பது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

கைதான 2 பேரும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக குற்றம் சாட்டிய போலீசார் அவர்கள் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த கோர்ட்டு குற்றவாளிகள் 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story