நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்
நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்தனர்.
கயத்தாறு,
நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்து விபத்து
மதுரை பொன்னகரத்தில் இருந்து ஒரு வேனில் பால்ராஜ் (75) என்பவர் தலைமையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் வேனில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை கூட்டத்தில் பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக வந்தனர். வேனை மதுரை ஆரியப்பட்டியைச் சேர்ந்த ஜெயராம் (30) என்பவர் ஓட்டினார்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடி பகுதியில் வந்த போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த ஜெயராம், பால்ராஜ் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிலர் கங்கைகொண்டானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story