கயத்தாறில் 20 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய குளம் பொதுமக்கள் மகிழ்ச்சி


கயத்தாறில் 20 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய குளம் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Oct 2018 3:30 AM IST (Updated: 1 Oct 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் 20 ஆண்டுகளுக்கு பின்பு குளம் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கயத்தாறு, 

கயத்தாறில் 20 ஆண்டுகளுக்கு பின்பு குளம் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குட்டி குளம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊரின் மைய பகுதியில் குட்டிகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் வழியாக தான் அங்கு உள்ள சாய்படைதாங்கி என்ற குளத்திற்கு கால்வரத்து உள்ளது. இந்த குட்டிகுளம் வழியாக கடம்பூர்-கயத்தாறு சாலை செல்வதால் அங்கு கண் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த குளத்தில் மண் மேடுகள் உருவாகி, கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த குளத்தை சீரமைக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து குட்டி குளம் சீரமைக்கப்பட்டது.

நிரம்பியது

இந்த நிலையில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் ஓடை வழியாக இந்த குட்டி குளத்துக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் குட்டி குளம் நிரம்பியது.

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளம் நிரம்பி உள்ளதால், நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story