அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழணையின் பாதுகாப்பை யொட்டி கடந்த ஆகஸ்டு மாதம் அணைக்கரை பாலம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது. கார்கள் மற்றும் வேன்கள் மட்டுமே சென்று வருகின்றன.
இந்த வழியாக சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மாற்று பாதை வழியாக ஜெயங்கொண்டம், தா.பழூர், மதனத்தூர் கொள்ளிடம் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அணைக் கரை பாலம் வழியாக பஸ்கள் இயக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் அணைக் கரை கீழணை வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், அணைக்கரை கீழணையை பார்வையிட சென்னையில் இருந்து பாதுகாப்பு குழு வருவதாகவும், அவர்கள் பார்வையிட்ட பிறகு அணைக்கரை கீழணை வழியாக மீண்டும் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்
இந்நிலையில் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், அரியலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் குணா தலைமையில் நேற்று அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக பஸ்கள் இயக்க கோரி மீண்டும் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மீன்சுருட்டி போலீசார் மற்றும் அணைக்கரை பொது பணித்துறை உதவி பொறியாளர் வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட குழு கொள்ளிடம் கீழணையை பார்வையிட்டு சென்று உள்ளனர். அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் பஸ்கள் இயக்க பரிந்துரை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி, பள்ளிக்கு நாங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக உடனடியாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் விரைவில் பஸ்கள் இயக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story