நெல்லையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லையில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
கலைநிகழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊட்டச்சத்து குறைவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சியை, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் உயரம் மற்றும் எடை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறித்து, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வளர் இளம் பெண்களுக்கு முதலில் வயதிற்கேற்ற எடை, உயரம், உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பதை உறுதி செய்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு சத்து குறைபாடு காரணமாக அனிமியா, ஹீமோகுளோபின் குறைகிறதா என்பதையும் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்த்து சிறு தானியங்கள், கீரை போன்ற சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அங்கமாக ‘நெகிழி இல்லா நெல்லை’ என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் பின்பற்றும் நடைமுறைகள் கூடிய புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பினால் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் மாதம் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும். துணிப்பைகளை உபயோகப்படுத்துவதால் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஒவ்வொருவரும் தானாக முன்வந்து உறுதியேற்றால் மட்டுமே பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கலைநிகழ்ச்சியில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story