நெல்லையில் பலத்த மழை ரோட்டில் வெள்ளம் தேங்கி நின்றது
நெல்லையில் நேற்று மதியம் திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் வெள்ள நீர் தேங்கி நின்றது.
நெல்லை,
நெல்லையில் நேற்று மதியம் திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் வெள்ள நீர் தேங்கி நின்றது.
பலத்த மழை
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. நேற்று மதியம் 12 மணி வரை மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்றும் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நெல்லை பகுதியில் மதியம் 1.30 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் ஒன்று கூடி மேககூட்டமாக காட்சி அளித்தது. 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ½ மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையின் கீழ் பகுதியில் ரோட்டில் வெள்ளநீர் தேங்கி நின்றது. பாளையங்கோட்டை சமாதானபுரம், ஐகிரவுண்டு, டவுன் பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஐகிரவுண்டு தெற்கு ரோட்டின் ஓரத்தில் வெள்ளம், ஓடையில் ஓடுவதுபோல் ஓடியது.
நயினார்குளம் மறுகால்
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சேர்வலாறு அணையில் இருந்து திறந்து விடுகின்ற தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. இதை தற்போது பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய், கோடகன்கால்வாயிலும் திறந்து விட்டு உள்ளனர். இப்படி கால்வாயில் செல்கின்ற தண்ணீர் நெல்லை நயினார்குளத்திற்கு வந்து குளம் நிரம்பி மறுகால் செல்கிறது. மேலும் நேற்று பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள குண்டு, குழிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று செங்கோட்டை, தென்காசி, கடையம், குண்டாறு அணைப்பகுதியில் மதியம் 12 மணியில் இருந்து ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:–
செங்கோட்டை–23, கடனாநதி–21, குண்டாறு–17, கருப்பாநதி–14, தென்காசி–13, ராமநதி–12, அடவிநயினார் அணை–7, சேர்வலாறு–6, சங்கரன்கோவில்–6, அம்பை–5.2, பாளையங்கோட்டை–3.6, ராதாபுரம்–3, நெல்லை–2,
Related Tags :
Next Story