ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் செம்பனார்கோவிலில் நடந்தது.
செம்பனார்கோவில்,
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பான கோரிக்கை மனுவை முதல்- அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெறும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவிலில் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், நிதித்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோருக்கு ஊழியர்கள் ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அனுப்பினர்.

Related Tags :
Next Story