திருப்பூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Oct 2018 1:15 AM IST (Updated: 3 Oct 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் 5 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(வயது 47). இவர் நேற்று முன்தினம் தனது மகள் மதுமதியுடன்(22) ஸ்கூட்டரில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது, இவர்களை பின்தொடர்ந்து 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வாலிபர்கள் உமாமகேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து உமாமகேஸ்வரி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story