மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 Oct 2018 3:30 AM IST (Updated: 3 Oct 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

குமுளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

வண்டிப்பெரியார்,


இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பசுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சேகர். அவருடைய மனைவி மயில். இவர்களுடைய மகன் சாதுகுட்டன் (வயது 25). நேற்று முன்தினம் இவர், தனது நண்பர் அபிஜித் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை சாதுகுட்டன் ஓட்டினார். பின்னால் அபிஜித் அமர்ந்திருந்தார். குமுளி அருகே 16-மைல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாதுகுட்டன் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அபிஜித்துக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story