காந்தி ஜெயந்தி அன்று மதுபாட்டில்கள் விற்ற 46 பேர் கைது
காந்தி ஜெயந்தி அன்று மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்ற 12 பெண்கள் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மூடப்படும். அதன்படி நேற்று முன்தினம் மதுக்கடைகள், பார் ஆகியவற்றை மூடி வைக்கும்படி கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டு இருந்தார்.
இருப்பினும் சில இடங்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் சாராய வேட்டை நடத்தினர். மேலும் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக விருத்தாசலம் தாலுகா முல்லைதோட்டத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்(வயது 24), ஆயிப்பேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்கிற இளையராஜா(36), மணிவேல்(32), ஆயிகுப்பத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ்(26), வடலூரை சேர்ந்த மகாலிங்கம்(60), புவனகிரியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(34), குணமங்கலம் கஜேந்திரன்(52), சின்னகண்டியாங்குப்பம் பரமகுரு(39), பரவளூர் செல்வராசு(45), ராசாப்பாளையம் செல்வராசு(46), கோ.மங்கலம் தங்கமணி(58), முத்தாண்டிக்குப்பம் அன்பரசன்(28), புலியூர் மாதாகோவில்தெரு பிராங்கிளின்(23), பெருமாத்தூர் அரவிந்த்(28), தங்ககொடி, செறு கொண்டலாடி நல்லான்(57), வீரபாண்டியை சேர்ந்த சதீஷ்(35), கார்கூடல் பெரியசாமி(65), தடியப்பட்டை சேர்ந்த சேட்டு(43) ஆகியோர் உள்பட மொத்தம் மாவட்டம் முழுவதும் 12 பெண்கள் உள்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து 135 லிட்டர் சாராயம் மற்றும் 404 மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story