சமூக ஆர்வலரின் வீட்டுக்காவல் ரத்துக்கு மராட்டிய போலீசார் எதிர்ப்பு


சமூக ஆர்வலரின் வீட்டுக்காவல் ரத்துக்கு மராட்டிய போலீசார் எதிர்ப்பு
x

புேனயை அடுத்த பீமா-கோரேகாவில் சமீபத்தில் நடந்த வன்முறை தொடர்பாக நாட்டின் வெவ்வேறு இடங்களில் வைத்து 5 பேர் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் கவுதம் நவலகா (வயது 65) என்பவர் கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு விதிக்கப்பட்ட வீட்டுக்காவலை ரத்து செய்து கடந்த திங்கட்கிழமை டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மராட்டிய போலீசார் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 167-வது விதியின் (1), (2) ஆகிய உட்பிரிவுகளை டெல்லி ஐகோர்ட்டு தவறுதலாக புரிந்து கொண்டு கவுதம் நவலகாவின் வீட்டுக்காவலை ரத்து செய்து இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story