சி.என்.ஜி. கியாஸ் விலை உயர்வு : டாக்சி, ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை


சி.என்.ஜி. கியாஸ் விலை உயர்வு : டாக்சி, ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2018 4:45 AM IST (Updated: 4 Oct 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சி.என்.ஜி. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் ஆட்டோ, டாக்சிகள் மற்றும் பெஸ்ட் குழும பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மும்பை,

சி.என்.ஜி. கியாஸ் விலை  நேற்று முன்தினம் முதல்  3 ரூபாய் 44 காசுகள் அதிகரித்தது.

இந்த விலை உயர்வு ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஆட்டோ பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் 2 ரூபாய் அதிகரிக்க வேண்டியும், டாக்சிக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் 3 ரூபாய் அதிகரிக்க வலியுறுத்தியும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தற்போது, ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக 18 ரூபாயும், டாக்சியில் குறைந்தபட்ச கட்டணமாக 22 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்தும் இறுதி முடிவை மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் எடுக்கும். இந்த ஆணையம் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆகவும், டாக்சி கட்டணம் ரூ.25 ஆகவும் அதிகரிக்கும்.


Next Story