குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது குருபெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள், நவக்கிரக சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை நடத்தினார்கள்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள வினாதார தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சியையொட்டி யாகபூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பாலபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகார பூஜைகள் நடத்தினார்கள்.
இதே போன்று எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவில்உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Related Tags :
Next Story