கோவை மாநகராட்சியில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறும் புதிய திட்டம்
கோவை மாநகராட்சியில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறும் புதிய திட்டம் வருகிற 15-ந் தேதி முதல் அமலாகிறது.
கோவை,
கோவை மாநகராட்சியில் புதிய வீடு, கடை போன்ற எந்த கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்துக்கான ஆவணங்கள், கட்டிட வரைபடம் உள்பட பல்வேறு ஆவணங்களை கோவை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன்பின்னர் அந்த ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அளிப்பார்கள். கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இதைத்தொடர்ந்து கட்டிட அனுமதி பெறுவதற்கான புதிய முறையை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய முறை தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதன்படி கட்டிடம் கட்ட விரும்புபவர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டிட அளவையர் அளித்த புதிய கட்டிட வரைபடம், நிலத்துக்கான ஆவணங்கள், கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அந்த விவரங்களை உதவி நகரமைப்பு அதிகாரிகள் எடுத்துக் கொண்டு நேரில் சென்று சரிபார்த்து அவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் ஆன்லைனில் அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றாலோ, ஆவணங்கள் விடுபட்டு இருந்தாலோ அதுபற்றிய விவரங்களும் உடனடியாக ஆன்லைனிலேயே கட்டிட உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ற வகையில் ஆவணங்களை சரி செய்து அனுப்பினால் அந்த கட்டிடத்துக்கான அனுமதி ஆன்லைனிலேயே வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி உரிமம் பெற்ற அளவையர் சங்கத் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:- ஆன்லைனில் கட்டிட அனுமதி அளிப்பது சிறந்த திட்டம். இது தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் அதற்கேற்ற சாப்ட்வேர்கள் நிறுவ வேண்டும். அப்போது தான் எந்த தடங்கலும் இல்லாமல் கட்டிட அனுமதி கிடைக்கும். இந்த புதிய திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தான் அதில் உள்ள தவறுகள், இடர்பாடுகள், கோளாறுகள் தெரியவரும். அவற்றையெல்லாம் சரி செய்து ஆன்லைனில் கட்டிட அனுமதி அளிக்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story