கோவை அருகே சிறுத்தை புலிகள் நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்
கோவை அருகே சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
போத்தனூர்,
கோவை- பாலக்காடு சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மதுக்கரை பழைய கல்குவாரி உள்ளது. அதன் அருகில் மலைக்குன்றுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது குகை போன்ற பாறை இடுக்கில் சிறுத்தை புலி குட்டிகள் இருப்பதை வனத்துறையினர் பார்த்து உறுதி செய்தனர். அதன் அருகில் காந்திநகர், போலீஸ் துப்பாக்கி சுடும் மைதானம் உள்ளன. இந்த பகுதியில் வசிப்பவர்கள் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் அச்சம் அடைந்து உள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மதுக்கரை பகுதியில் சிறுத்தை புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அது வனப்பகுதி என்பதால் அவை ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். இரண்டு குட்டி சிறுத்தை புலிகள் இருப்பதால் அதன் தாய் மற்றும் மேலும் ஒன்றிரண்டு சிறுத்தை புலிகள் அந்த பகுதியில் இருக்கலாம் என்று கருதுகிறோம்.
சிறுத்தை புலிகளை கண்காணிக்க 2 வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். அந்த சிறுத்தை புலிகளுக்கு உணவு கிடைக்காது என்பதால் அவை ஆடு, மாடுகளை கொல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளோம். சிறுத்தை புலிகளால் இதுவரை எந்த தொந்தரவும் ஏற்பட வில்லை. ஆனாலும் அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் அவற்றை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story